ஜல தீபம் - பகுதி 3 - Jala Deepam -part 3
கனோஜி ஆங்கரே(1698–1729) : இவர் தான் முக்கியம்.
நம்ம தலைமுறை அறியாத சரித்திர நாயகன்.குறிப்பாக தமிழ் மக்கள் அறியாத தலை சிறந்த வீரன்.சாண்டில்யன் , கனோஜியின் சரித்திரத்தை படித்த பிறகு .கனோஜி பற்றி தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் பெரிதாய் இருந்தது.அவருடைய 10 வருட முயற்சியில் உருவானது தான் இந்த ஜல தீபம்.
நான் மும்பையில் 3-4 வருடம் இருந்தது எனக்கு படிக்கும் போது மேலும் சுவாரசியத்தை தந்தது.நமக்கு(தமிழர்களுக்கு) ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பத்ற்காகவோ என்னவோ இந்த கதையின் நாயகனை [இதயசந்திரன் - கற்பனை கதாபாத்திரம்] தமிழனாக வைத்திருந்தார்.இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் [ கனோஜி தவிர] யாவும் கற்பனையே.ஆனால் சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக சேர்த்திருப்பார்.
நான் சுற்றிய பல சுற்றுலா தளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.முக்கியமாக , ஜச்ஞீரா [Janjira fort ],இதன் சிறப்பு கடல்கரையிலிருந்து சற்று உள்ளிருக்கும்.கரையிலிருந்து பார்த்தால் இதன் நுழைவுவாயிலை காண முடியாது.
[படிக்கும் போது , ரத்னகிரிக்கு செல்லும் வாய்பை நான் ஒரு முறை தவறுவிட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது]
தானே,கல்யான் .. மும்பை சுற்றியுள்ள இடங்கள் [நம்ப தாம்பரம் மாதிரி].நான் அடிக்கடி அந்த இடங்களுக்கு செல்வதுண்டு. அந்த இடங்கள் இந்த கதையில் வரும்போது ஒரு பெருமிதம் வந்துதான் போகிறது.
நான் படித்த சரித்திர கதைகளில் யாராவது ஒரு துறவி இருப்பார் , முக்கிய கதாபாத்திரமாக.இங்கும் அப்படி பிரும்மேந்திர சுவாமிகள் இருக்கிறார்.
3 நாயகிகள் , வர்ணனைக்கு பஞ்சமில்லை.சாண்டில்யன் பாணி தனி பாணி தான் [கிட்டதட்ட வைரமுத்து மாதிரி - இது என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்] .மூவரும் நாயகனுடன் காதலில் மயங்குவது கொஞ்சம் அதிகமோ என்று தோனியது.
படிக்கும் போது , சுவாரசியமாக வரலாற்று நிகழ்வுகள் நம் கண்முன்னே கண்டிப்பாக வந்து போகும்.

| Books Detail | |
| Book Status | Looks Like New |
| No Of Pages | 468 Pages |
| Book Cover | Paper Back |
| Author Name | Sandilyan |
| Online Store Price | Rs.125 |